பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 ஆற்றங்கரையினிலே

காட்டினார்; விண் அளாவி நின்ற வேங்கட மலையில் எழுந்து பொங்கி வழிந்த அருவியின் அழகினைக் கண்டு ஆனந்தமுற்றார். அம்மலையின் உச்சியில் அருளுருவாக நின்ற கருமுகில் வண்ணனைக் கண்டு களிகூர்ந்தார்.’

இத்தகைய செம்மை வாய்ந்த திருவேங்கட மலையில் ஐயறிவுடைய மும்மத வேழமும் அன்பு நெறி காட்டும் அழகினைக் கண்டார் ஒர் ஆழ்வார். ஓங்கி வளர்ந்த ஒரு மூங்கிற் பண்ணையின் அருகே தன் காதல் மடப் பிடியை அழைத்துச் சென்றது ஒரு பெருங் களிறு, தழைத்த மூங்கிற் கொழுந்தை வளைத்து இழுத்துப் பறித்தது; அடுத்திருந்த தேன் கூட்டில் அத் தழையைத் தோய்த்தது, தேன் அளாவிய இளங்கொழுந்தைக் காதற் பிடியிடம் தின்னக் கொடுத்து மகிழ்ந்தது. இக்காட்சியைக் கண்டு இன்புற்றார் அவ் ஆழ்வார்:

தமிழ் நாட்டில் திருமால் கோயில் கொண்டுள்ள தலங்கள் திருப்பதிகள் என்று போற்றப்படும். ஆயினும், திருப்பதி என்று பொதுப் பெயரைத் தனக்கே உரியதாக்கிக் கொண்டது திருவேங்கடம் திருப்பதியைத் திசை நோக்கி வணங்குவர் தமிழகத்தில் வாழும் மன்னரும் மக்களும்

பழங்காலத்தில் வஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு செங்கோல் செலுத்தினான் ஒரு சேர மன்னன். அவன் சிறந்த வீரமும் சீலமும் வாய்ந்தவன். மூன்று தமிழ் நாட்டையும் ஒரு குடைக் கீழ் அமைத்து ஆண்டவன். கொல்லி காவலன், கூடல் நாயகன், கோழிக் கோமான் என்று சிறப்பிக்கப் பெற்ற அம் மன்னர் மன்னனைக் குலசேகரப் பெருமாள் என்று இன்றும் இந்நாடு போற்றுகின்றது. திருவேங்கட மலையில் “ஓங்கி உலகளந்த உத்தமன் நின்று அருளும் திருக்கோலம் அவர் நெஞ்சத்தை உருக்கிற்று. வெற்றரசாளும் உரிமையை வெறுத்தது அவர்