பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. நடு நாடு

“வெண்ணெய் உருகுமுன்னே

பெண்ணை பெருகும் ” - பழமொழி

5. திருக்கோவலூர்

தென் பெண்ணையாறு பாயும் திருநாடு நடு நாடாகும். அந் நாட்டின் தலைநகராகத் திகழ்ந்தது திருக்கோவலூர் நகரம். மலையமான் என்னும் குறுநில மன்னர் குலத்தினரால் நெடுங்காலம் ஆளப்பட்டமையால் மலையமான் நாடு என்ற பெயரும் அந் நாட்டுக்கு அமைந்தது; மலாடு என்பது அப் பெயரின் குறுக்கம்.

முன்னாளில் அந் நாட்டை யாண்ட மன்னருள் தலைசிறந்து விளங்கினான் திருமுடிக்காரி. அவன் புலவர்க்குப் பேருபகாரி, போர்க்களத்தில் நிகரற்ற குதிரை வீரன். காரி என்னும் பெயர் பெற்ற குதிரையின்மீது அமர்ந்து, காற்றென விரைந்து, மாற்றாரை வென்று அடக்கிய மலையமான் திருமுடிக்காரியின் வீரத்தை வியந்து பாடினர் கபிலர் முதலாய தலைமைத் தமிழ்க் கவிஞர்கள். படைத் திறமும் கொடைத் திறமும் ஒருங்கே வாய்ந்த காரியைப் பறம்புமலை வள்ளலாகிய பாரியின் வரிசையில் வைத்துப் பாமாலை சூட்டினர்.’

இத்தகைய சிறப்பு வாய்ந்த மலையமான் குலத்திலே தோன்றினார் ஒரு சீலர், அவர் பகைவர்க்குக் கொடியவர்; பக்தர்க்கு அடியவர். அவரை வென்று பெண்ணை