பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? ஆற்றங்கரையினிலே

நாட்டைக் கவர்ந்து கொள்ள ஆசைப்பட்டான் முத்தநாதன் என்ற சிற்றரசன். பலமுறை படை யெடுத்தான். ஆயினும் மலையமானை வெல்ல முடியவில்லை. நேர்முகமாகப் பெற முடியாத வெற்றியை மறைமுகமாக அடையத் துணிந்தான். குறுநில மன்னனுக்குரிய கோலத்தைக் களைந்தான். மேனியில் வெண்ணிற்றை அணிந்தான். தலையிலே சடையை முடித்துக் கட்டினான். ஏட்டுச் சுவடி யொன்றை எடுத்து அதனிடையே தீட்டிய கத்தியைப் பதனமாய் மறைத்து வைத்தான். பட்டப் பகலில் ஆசாரக் கள்ளனாய் வெளிப்பட்டு மலையமான் மாளிகை யின் உள்ளே புகுந்தான்.

“ மெய்யெலாம் நீறு பூசி

வேணிகள் முடித்துக் கட்டி கையினில் படைக ரந்த

புத்தகக் கவளி ஏந்தி மைபொதி விளக்கே என்ன

மனத்தினுள் கறுப்பு வைத்து பொய்தவ வேடம் கொண்டு

புகுந்தனன் முத்த நாதன்” என்ற தவவேடம் புனைந்து போந்த கள்வனைத் திருத் தொண்டர் புராணம் காட்டுகின்றது.

தவ வேடத்தின் பெருமையால் தடையெல்லாம் கடந்து மலையமான் இருந்த இடம் போந்தான் முத்தநாதன். முழுநீறு பூசிய முனிவரைக் கண்டபோது இருக்கையை விட்டு எழுந்தான் மலையமான் இரு கைகளையும் குவித்து வணங்கினான்; தக்கதோர் ஆதனத்தில் அமர்த்தினான்; பணிந்து ஒடுங்கி நின்றான்.

அப்போது முனிவன் அவனை நோக்கி, “மன்னவா ! மாதொரு பாகன் அருளிய ஆகம நூல் ஒன்று எமக்குக் கிடைத்தது. இந்நூல் வேறு எங்கும் கிடையாது.