பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவலூர் 44

ஒருநாள் மாலைப் பொழுதில் அந் நகர வீதியிலே நடந்து கொண்டிருந்தார் ஒரு பெரியார். அப்போது வானம் இருண்டது கருமேகம் திரண்டது. “அந்தி மழை அழுதாலும் விடாதே” என்று எண்ணி அருகே இருந்த வீட்டில் ஒதுங்கினார் அப்பெரியார். “இரவிலே படுத்துக் கொள்ள இடம் வேண்டும்” என்று வீட்டுக்கு உரியவரை நோக்கி விண்ணப்டம் செய்தார். அவர், அவ் வீட்டின் இடைகழியை ஒழித்துக் கொடுத்து, “இங்கே படுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி உள்ளே சென்றுவிட்டார்.

மழை வலுத்தது; காற்றும் சேர்ந்து அடித்தது. இடை கழியில் இருள் செறிந்தது. அப்போது ஒருவர் வாசலில் ஒடி வந்து நின்றார். “இங்கே கொஞ்சம் ஒதுங்க இடம் கிடைக்குமா?” என்று கூவினார். அக் குரல் கேட்டவுடன் உள்ளே படுத்திருந்தவர் எழுந்திருந்து, “இங்கே ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்” என்று சொல்லி வந்த வருக்கு இடம் கொடுத்தார்.

இருவரும் நனைந்த உடையோடு நடுங்கிக்கொண் டிருக்கையில் இன்னொருவர் ஒடி வந்து, “ஐயா ! சிறிது இடம் வேண்டும் “ என்று கேட்டார். அகன்ற மன முடையார் இருவரும் அவரையும் வருக என்று அழைத்து, “இங்கே ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம்” என்று சொல்லி, எழுந்து நின்று இடம் கொடுத்தார்கள்.

“ இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்”

என்ற தமிழ் மறைக்கு ஒர் எடுத்துக்காட்டாக நின்ற அப்பெரியார்க்கு இறைவன் இடைகழியில் காட்சி யளித்தான் என்று பழைய வரலாறு கூறுகின்றது.

இவ்வாறு இடைகழியில் இறைவனைக் காணும் பேறு பெற்ற பெரியார்களில் ஒருவர் காஞ்சி நகரத்தார்;