பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் உயர்திரு. தி. மூ. நாராயணசாமிப் பிள்ளை, எம்.ஏ., பி.எல். அவர்கள் அணிந்துரை

சொல்லின் செல்வர் - பேராசிரியர் - டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களை யான் க்டந்த முப்பத்தைந்து ஆண்டுகட்கு மேலாக நன்கறிவேன். அவர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டின் பண்பையும் பயனையும் தமிழுலகம் நன்கறியும்.

முதன்முதலாகப் பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்களை நான் எங்கள் ஊராகிய திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள பூவாளுரில்தான் கண்டேன். அப்போது அவர்கள் திருக்குறள் பற்றிச் செய்த சொற்பொழிவு ஒன்றையும் கேட்டேன். பி.ஏ., பி.எல். பட்டம் பெற்ற ஒருவர் அந்த நாளில் கேட்பவர் கிளர்ச்சி பெறும் வகையில் தமிழைப்பற்றிப் பேசுதல் மிக அருமை. அந்த நிலையில் சேதுப்பிள்ளை அவர்களின் உணர்ச்சி நிறைந்த பேச்சைக் கேட்ட நான் அவர்களிடம் பேரன்பும் பெருமதிப்பும் கொள்ளலானேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன் இவ்வாறு முகிழ்த்த எங்கள் நட்பு மேலும் மேலும் வளர்ந்தது. அதற்குக் காரணம் சேதுப்பிள்ளை அவர்களின் சென்னைப் பல்கலைக் கழக வாழ்க்கையே. அவர்கள் சென்னை மாநகர் வந்தபின் ஒய். எம். சி. ஏ. யிலும் ஒய்.எம்.ஐ.ஏ. யிலும், கந்தகோட்டத்திலும் முறையே சிலப்பதிகாரம், கம்பராமாயணம், கந்த புராணம் ஆகிய