பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 p3

கடமைப்பட்டுள்ளோம் ‘ என்று அச் சீட்டிலே கண்டிருந்தது.

இவ்வாறு அடிமையோலை எழுதிக் கொடுத்த ஆரூரன் மரபிலே பிறந்தார் நம்பி ஆரூரன் என்னும் சுந்தரர். அழகின் கொழுந்தென விளங்கிய நம்பியை, திரு முனைப்பாடி நாட்டரசனாகிய நரசிங்க முனையர் ஆசை மகனாக எடுத்து வளர்க்க விரும்பினார். நம்பியின் பெற்றோரும் அரசன் கருத்திற்கு இசைத்தார்கள். அந்தணர்க்கு உரிய சீலமும், அரசர்க்கு உரிய சிறப்பும் பெற்றுத் திருந்தி வளர்ந்தார் சுந்தரர்.

மணப் பருவம் உற்றபொழுது புத்துரில் வாழ்ந்த ஓர் அந்தணன் மகளை அவர்க்கு மணம் பேசி முடித்தார்கள். புத்துர் புதுமணம் பெற்றது என்று புகழ்ந்தனர் மக்கள் எல்லாம். திருமணத்திற்குக் குறித்த நாளில் உற்றாரும், உறவினரும் அங்கு வந்து நிறைந்தனர். திருமண மேடையில் அமர்ந்திருந்த மணமக்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தனர்; மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கினர்.

அந்த வேளையில் அங்கு வந்தார் ஒரு விருத்த வேதியர். மணப் பந்தலின் நடுவே நின்றுகொண்டு “இந்த L? மகனுக்கும் எனக்கும் இடையே ஒரு வழக்கு உண்டு; அதை இப் பொழுதே தீர்த்து ஆகவேண்டும். இவன் என் அடியான் ” என்று பேசினார்:

கிழவர் பேச்சைக் கேட்டுச் சிரித்தார் சிலர் திகைத்தார் சிலர். வேதனை தந்த வேதியனை நோக்கி வெகுண்டார் சுந்தரர். முதியோனே : அந்தணன் ஒருவன் வேறோர் அந்தனனுக்கு அடிமையாதல் எங்கேனும் உண்டோ? பித்துப் பிடித்தவன் போல் பேசுகின்றாயே “ என்று மிடுக்காக மொழிந்தார். முதியவர் அதைப் பொறுமையாகக் கேட்டு “நான் பித்தன் ஆயினும் ஆகுக! பேயன் ஆயினும் ஆகுக! நீ வித்தகம் பேச வேண்டா பணி செய்ய வேண்டும்” என்றார்.