பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 ஆற்றங்கரையினிலே

சபையோர் சிந்தித்தனர். “அந்தணர் அடிமையாகும் வழக்கம் இல்லை. ஆயினும் சுந்தரனுடைய பாட்டன் இசைந்து எழுதிக் கொடுத்த அடிமையோலையை ஆதரவாகக் கொண்டு முறைப்பாடு செய்கின்றார் இம் முதியவர். ஆட்சி, எழுத்து, காட்சி என்னும் மூன்றில் ஒன்றை இவர் ஆதாரமாகக் காட்டுதல் வேண்டும்” என்று கூறினர்.

“ஆட்சியில் ஆவ ணத்தில்

அன்றிமற் றயலார் தங்கள் காட்சியின் மூன்றில் ஒன்று

காட்டுவாய் என்ன முன்னே மூட்சியிற் கிழித்த ஒலை

படியோலை மூல ஓலை மாட்சியிற் காட்ட வைத்தேன்

என்றனன் மாயை வல்லான்” சான்று காட்டுக’ எனப் பணித்த சபையோரை நோக்கி, “இரண்டு ஒலை எழுதித் தந்தான் இவன் பாட்டன். ஒன்று மூலவோலை; மற்றொன்று படியோலை. மூலவோலை இதோ இருக்கிறது” என்று காட்டினார் முதியவர்.

பஞ்சாயத்துச் சபையின் கரணத்தான் அவ் வோலையைப் பணிந்து வாங்கினான். சுருள் நீக்கி விரித்தான்; எழுதியிருந்த வாசகத்தைச் சபையிலே படித்தான்:

“ வெண்ணெய்நல்லூர்ப் பித்தனுக்கு நானும் என் மரபுளோரும் வழித்தொண்டு செய்தற்கு இவ்வோலை எழுதிக் கொடுத்தேன்; நாவலூர் ஆதிசைவன் ஆரூரன் ஆகிய நான். இவை என் எழுத்து” என்ற வாசகத்தைக் கேட்டனர் சபையார். “இது உமது பாட்டனார் எழுத்துத் தானா? பாரும்” என்று சுந்தரரைப் பார்த்துக் கேட்டனர்.