பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்ணெய்நல்லுர் 52

  • பாட்டனார் கையெழுத்து இவனுக்கா தெரியும்? அவர் எழுத்துடைய வேறு ஒலைகளின் கைச்சாத்தோடு இதனை ஒப்பு நோக்குதலே முறையாகும்” என்றார் முதியவர். அதுவே சரி என்று ஏற்றுக்கொண்ட சபையார் “ஆவணக்களரி” யிலிருந்து ஆரூரன் கையெழுத்தடங்கிய ஒலைகளை வரவழைத்தார்கள். அவற்றோடு அடிமை யோலைக் கையெழுத்தை ஒப்பு நோக்கினார்கள் ஆரூரன் கையெழுத்தே என்று தெளிந்தார்கள். “ இந்த வழக்கில் பித்தனார் வென்றார்; சுந்தரர் தோற்றார் ” என்று தீர்ப்புரைத்தார்கள்.

வழக்குத் தீர்த்த பின்னர், “ஐயரே ! இவ்வூரே உமது ஊர் என்று தெரிந்தோம். இங்கு உம்முடைய வீடு எங்கு இருக்கின்றது ?” என்று வினவினர் சபையார் முதியவர் முகமலர்ந்து” என்னை ஒருவரும் அறியீராகில் வாருங்கள் ! காட்டுகின்றேன் “ என்று அழைத்துக்கொண்டு திருக் கோயிலின் உள்ளே சென்றார்; மறைந்தார்.

இறையவனே மறையவனாக வந்து சுந்தரரை வலிந்து ஆட்கொண்டான் என்று எல்லோரும் அறிந்தார்கள்: ஆனந்தக் கண்ணிர் சொரிந்தார்கள்; சுந்தரர் மெய்யரும்பி விதிர் விதிர்த்து உருகினார்; கதறினார். எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே நாயேனை வலிந்து ஆட்கொண்ட நாதனே ! பேயேனைத் தடுத்தாண்ட பெருமானே !” என்று திருக்கோயிலின் முன்னே பணிந்து விழுந்தார்; பரவசமுற்றார்.

அப்பொழுது விண்ணிலே ஒரு குரல் எழுந்தது. “வன் தொண்டனே பணி செய்க, தமிழிலே பாடுக முன்னமே என்னைப் பித்தன் என்றாய் ! ஆதலால் பித்தன் என்றே எடுத்துப் பாடுக” என்ற வானொலியைக் கேட்டு இன்ப