பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 - ஆற்றங்கரையினிலே

அம் மன்னருள் ஒருவன் மகேந்திரவர்மன். அவன் சமன சமயத்தைச் சார்ந்தவன். அச் சமயத்தைப் பேணி வளர்த்தவன். அவன் ஆதரவு பெற்ற மதம் தமிழகத்தில் செழித்து ஓங்கி வளர்ந்தது. பட்டி மண்டபங்களில் சமயவாதம் பாங்கு நிகழ்ந்தது.

சமனப் பள்ளியின் தலைவராக வீற்றிருந்த தருமசேனர் புத்தரோடு வாக்கு வாதங்கள் புரிந்து வெற்றி பெற்றார். அதனால் அவர் புகழ் எங்கும் பரந்தது. பாடலிபுரப் பள்ளியின் பெருமையெல்லாம் தம் பெருமை ஆக்கிக் கொண்டார் தருமசேனர் என்று தமிழகம் அவரைப் புகழ்ந்தது.