பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 ஆற்றங்கரையினிலே

பாடலிபுத்திரப் பள்ளியில் நிகரற்ற தலைவராய் விளங்கிய தருமசேனருக்குக் கடுமையான நோய் வந்துற்றது. சூலை நோய் என்று மருத்துவர் சொல்லிய அத் தீப்பிணி அவரை வாட்டி வருத்தியது; அதனை மாற்றுவதற்கு மருத்துவர்கள் கொடுத்த மருந்தெல்லாம் பயனற்றுப் போயின. “பொல்லாத சூலை நோய் தீருமாறு இல்லை” என்று எல்லோரும் கை விட்டார்.

அந்நிலையில் தமக்கையாரைக் காண வேண்டும் என்ற விருப்பம் தருமசேனரது உள்ளத்தில் எழுந்தது. அவரிடம் ஒரு பணியாளனை அனுப்பினார். அவன் திருவதிகையிற் சென்று திலகவதியாரிடம் தம்பியின் நிலைமையைத் தெரிவித்தான்.

“கொல்லாது சூலைநோய்

குடர்முடக்கித் தீராமை

33 +

எல்லாரும் கை விட்டார் என்று அவன் சொல்லிய போ திடுக்கிட்டார் திலகவதியார். ஆயினும் அவர் பாடலி புத்திரம் செல்ல இசைந்தார் அல்லர்.

தமக்கையார் கருத்தை அறிந்த தருமசேனர் பொல்லாத வயிற்று நோயைப் பொறுத்துக்கொண்டு வழி நடந்து திலகவதியார் இருந்த திருமடத்தைச் சென்றடைந்தார்; பல்லாண்டுகளாகக் காணப் பெறாத தமக்கையின் தவக்கோலத்தைக் கண்டு மனம் கரைந்தார்; அவர் தாள் களில் விழுந்து கண்ணிர் சொரிந்தார்.

கடும் பிணியால் நலிந்து கதறிய தம்பியைக் கண்ட போது திலகவதியார் மனம் குழைந்து, ஈசனது மறக் கருணையை நினைந்து மனமார வாழ்த்தினார். தீரா நோய் தீர்க்கவல்ல திருநீற்றை மறைமொழி ஒதிக் கொடுத்தார். திலகவதியாரே கண்கண்ட தெய்வம் என்று கருதிய தம்பியார் அத் திருநீற்றைப் பணிந்து ஏற்றுப் பண்புற அணிந்தார். i.