பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவதிகை

மனம் திரும்பிய தம்பியை அழைத்துக்கொண்டு திருக்கோயிலை அடைந்தார் திலகவதியார். அங்கே திரு அதிகைப் பெருமானைக் கண்டபோது இருவர் உள்ளமும் அனலிடைப்பட்ட மெழுகுபோல் உருகிற்று கண்ணிர் ஆறாகப் பெருகிற்று. தமிழ்ப் பாட்டுக்கு இரங்கும் ஈசனார் முன்னின்று தம் குறையை முறையிட்டார் தம்பியார்.

கூற்றாயின வாறு விலக்ககிலீர்

கொடுமைபல செய்தனநான் அறியேன் ஏற்ற யடிக்கே இரவும் பகலும் -

பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டா னத்துறை அம்மானே” என்று தம் ஆற்றாமையை அறிவித்தார். “அப்பனே ! அதிகையில் அமர்ந்தருளும் ஐயனே அடியேன் கொடுமை யொன்றும் செய்தறியேன், நெஞ்சில் வஞ்சகம் நினைத் தறியேன் எந்நாளும் உம்மை மறந்தறியேன் கொல்லாமல் கொல்கின்ற கொடிய நோயைத் தீர்த்தருள வேண்டும்; சுடுகின்ற சூலையைத் தவிர்த்தருள வேண்டும் வயிற்றோடு துடக்கி முடக்கி வருத்தும் வன்பிணியைத் துடைத்தருள வேண்டும் அஞ்சேல் என்று அருள் புரியவேண்டும் ஐயனே : “ என்று இறைஞ்சினார்.

இறைவன் அருள்கூர்ந்தான். பொல்லாத சூலை நோய் அந் நல்லாரை விட்டு ஒழிந்தது. அந் நோய் தீர்வதற்கு அவர் இசைத்த தமிழ்ப் பாட்டின் அருமை யறிந்த தமிழகம் திருநாவுக்கரசர் என்றும் வாகீசர் என்றும் அவரைப் போற்றிப் புகழ்ந்தது. அன்று முதல் சிவத்தொண்டு செய்யத் தலைப்பட்டார் திருநாவுக்கரசர்”

திருத் தொண்டராகிய திருநாவுக்கரசர் நாள்தோறும் ‘நல்ல தமிழ்ப் பாட்டிசைத்து நாட்டு மக்களின் உள்ளங்