பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 ஆற்றங்கரையினிலே

அறத்தையே அடைக்கலமாகக் கொண்டு போர் நிகழ்த்தும் ஆன்ம வீரரை வீரப் படை கொண்ட வேந்தர் எந்நாளும் வெல்லுதல் இயலாது என்னும் உண்மையைத் திருநாவுக்கரசர் வரலாற்றால் உணர்ந்த பாரதியார்,

“பச்சைஊன் இயைந்தவேல்

படைகள்வந்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப தில்லையே.”

என்று வீர உணர்ச்சியை ஊட்டினார்.

திருநாவுக்கரசர் அணிந்த பாமாலையும், திலகவதியார் சாத்திய பூமாலையும் பெற்ற திருவதிகை முன்னாளில் அதியரைய மங்கை என்று அழைக்கப்பெற்றது.

“அறிதற்கு அரியசீர் அம்மான் தன்னை

அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை எறிகெடிலத் தானை இறைவன் தன்னை

ஏழையேன் நான்பண்டு இகழ்ந்த வாறே ”

என்ற திருப்பாசுரத்தில் அதியரைய மங்கை என்று அப்பதியைக் குறித்தருளினார் திருநாவுக்கரசர். எனவே, அதிகை என்பது அதியரைய மங்கை என்ற நெடும் பெயரின் குறுக்கம் என்று தெரிகின்றது. -

நெடிய பெயர்களைக் குறுக்கி வழங்குதற்குரிய முறையைக் காட்டியுள்ளனர் தமிழ்க் கவிஞரும் அறிஞரும். சென்னையிலுள்ள மயிலாப்பூரை மயிலை என்று குறுக்கினார் திருஞானசம்பந்தர். வெண்ணெய்நல்லூர் என்ற ஊர்ப் பெயரை வெண்ணை என்று குறுக்கினார் கம்பர். கொடும்பாளுரைக் கொடும்பை என்றார் இளங்கோவடிகள். நெல்லை நாட்டிலுள்ள கரிவலம்வந்த நல்லூர் கருவை என்று குறுக்கப்பெற்றது; அந்நாட்டி