பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சோழ நாடு

“ பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய

கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி கோனிலை திரிந்து கோடை நீடினுத் தானிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை’

- மணி மேகலை,

திருவாரூர்

நல்லரசும் வல்லரசும் இந் நிலவுலகில் என்றும் உண்டு. நல்லரசாட்சியில் மன்னுயிர் இன்புற்து வாழும்; வல்லர சாட்சியில் துன்புற்று வாடும்; உயிர்கள் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணிர் அரசாங்கத்தை அறுக்கும் படை என்று அறநூல் கூறுகின்றது.

ஆயினும் கல்மனம் படைத்த வல்லரசாங்கம் கண்ணிரை ஒரு பொருளாகக் கருதுவதில்லை. சிறையிலிருந்த சீதையின் கண்ணிரால் இராவணன் மனம் கரையவில்லை; பாஞ்சாலியின் கண்ணிரால் துரியோதனன் மனம் துளங்கவில்லை, சயத்தன் பெருக்கிய கண்ணிர் சூரன் உன்னத்தை உருக்கவில்லை; ஆனால் ஐயறிவுடைய ஒரு பக வடித்த கண்ணிரைக் கண்டு கலங்கினான் ஒரு தமிழ் மன்னன் வாயில்லாத அவ்வுயிரின் குறையறிந்து முறைசெய்தான்.

இக் காட்சியைக் காணும் பேறு பெற்றது, சோழ நாட்டில் உள்ள திருவாரூர் என்னும் திருநகரம்.