பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் . 70

திருநாவுக்கரசர், செக்கச் சிவந்த மேனியனாகிய ஆரூர்ப் பெருமான் அந்நகரில் ஆழித் தேரூர்ந்து செல்லும் அழகினைக் கண்குளிரக் கண்ட அவ் அடியார்,

ஊழித்தீ அன்னானை

ஒங்கொலிமாப் பூண்டதோர் ஆழித்தேர் வித்தகனை

நான்கண்டது ஆரூரே” என்று அகம் குளிர்ந்து பாடினார்.

ஆரூர்ப் பெருமானிடம் அயராத அன்பு பூண்ட அடியார்களுள் ஒருவர் சுந்தரமூர்த்தி, திருநாவலூரிலே பிறந்த சுந்தரர்க்கு நம்பி ஆரூரன்’ என்று பெயர் இட்டனர் அவர் பெற்றோர். அவரைத் திருமணப் பந்தரில் தடுத்து ஆட்கொண்டான் ஈசன். அன்று முதல் பாடும் பணியே பணியாக் கொண்ட நம்பி ஆரூரர், திருவாரூர்ப் பெருமானை நினைந்து உருகினார்; அவரை வணங்க ஆசை புற்றுப் புறப்பட்டார்.

வன்தொண்டர் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற நம்பி ஆரூரர் திரு ஆரூரை நோக்கி வருவதை அறிந்த நகர மாந்தர் அளவிறந்த ஆர்வம் உற்றனர். அவர் வருநாள் ஒரு திருநாள் எனக் கருதி வீதிகளில் பன்னிர் தெளித்தனர்; வீடுகளில் மலர் மாலை துக்கினர்; மேளதாளங்களோடு நகர முகப்பில் அவரை வரவேற்றனர்.

ஆரூரர் உள்ளத்தில் ஆனந்த வெள்ளம் பொங்கி எழுந்தது. “எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ, கேளிர் ” என்ற சந்தத் தமிழ்ப் பாட்டிசைத்துத் திருவீதியில் நடந்தார். அடியார் புடைசூழ ஆலயத்தின் உள்ளே சென்று, உச்சிமேற் கை குவித்து அடியேனை ஆட்கொண்ட ஐயனே ஆரூரில் அமர்ந்த அருமணியே ! உன் திருவடியே தஞ்சம் என்று முறையிட்டுச் செஞ்சொற் பாமாலை பாடினார்.