பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் 72

“அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன் என்று எழுந்த அழகிய மொழிகள் நம்பி ஆரூரது பரந்த மனப்பான்மைக்குச் சிறந்த சான்றாகும்:

33

ஆரூரர் பாடிய திருத்தொண்டத் தொகையின் அடியாக எழுந்த பெருநூல் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம். பக்திச் சுவையோடு பாட்டின் சுவையும் சொட்டச் சொட்டத் திருத்தொண்டர் பெருமையையே விரித்துரைத்தார் சோழ நாட்டு முதலமைச்சராகிய சேக்கிழார் பெருமான். அவர் இயற்றிய நூலின் அருமையறிந்த அரசன் “தொண்டர் சீர் பரவுவார்” என்னும் பட்டம் அளித்து அவரைப் பாராட்டினான்.

மலைநாட்டை ஆண்ட மன்னனாகிய சேரமான் பெருமாளும் நம்பி ஆரூரரும் உணர்ச்சியால் ஒன்றுபட்டு உயரிய நண்பராயினர். நம்பியைக் காணும் ஆர்வத்தால் திருவாரூரை வந்தடைந்தார் சேரமான். புவிவேந்தரும் கவிவேந்தரும் பூங்கோயிலிற் போந்து வழிபட்டனர். தமிழ்ப் புலமை வாய்ந்த சேர மன்னன் மும்மணிக் கோவை என்னும் பாமாலை அணிந்து திருவாரூர்ப் பெருமானை வழிபட்டார்.

அம்மன்னன் விருப்பத்திற்கு இணங்கி அவனுடன் சேர நாட்டிற்குச் சென்றார் ஆரூரர்; சில நாள் சேரமானோடு அளவளாவி இருந்தார். ஆயினும் அவர் மனம் திருவாரூர்ப் பெருமானையே நாடிற்று. ‘ என்னை ஆளுடைய பூங்கோயிற் பெருமான் பொன்னும் பொருளும் தருவான்; போகமும் ஞானமும் அளிப்பான்; பேதையேன் செய்யும் பிழையெலாம் பொறுப்பான். பின்னும் பிழை செய்யாமல் காப்பான். ஏழையேனை இவ்வாறு காத்தருளும் ஆரூரானை மறக்கவும் ஒண்னுமோ ‘ என்று மனங் கசிந்து பாடினார். .