பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் 74 பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி !’ என்று ஈசனைப் பாடினார் திருநாவுக்கரசர். இசை வடிவாகிய ஈசன் பண்ணோடு இசைபாடும் அடியார்க்கு மண்ணுலகும் விண்ணுலகும் மகிழ்ந்தளிப்பான் என்று அருளிப் போந்தார் திருஞான சம்பந்தர்.

நல்லியற் கவிஞராகிய ஞானசம்பந்தர், திருக்கோலக் காவில் இறைவனை வழிபடப் போந்தார்; தளிர் போன்ற இளங் கைகளால் தாளமிட்டுத் தமிழ்ப் பாட்டிசைத்தார். அப்போது பெருமான் அருள் கூர்ந்து பொற்றாளம் பரிசளித்தான். நற்றமிழ் பாடிய ஞான சம்பந்தன் பொற்றாளம் பெற்றான் என்று மாநிலம் புகழ்ந்து மகிழ்ந்தது.’

திருவாரூரில் அமர்ந்த இறைவனை இன்னிசை வண்ணனாகக் கண்டு வணங்கினார் நம்பி ஆரூரர்; சில காலம் அப்பெருமானைப் பிரிந்திருக்க நேர்ந்தபோது உள்ளம் உருகினார். திருவாரூரைத் திசை நோக்கித் தொழுது என்னை ஆளுடைய ஐயனே எழில் ஆர்ந்த ஏழிசையாய் நின்றாய் நீயே இன்னிசையின் பயனாய்’ இருந்தாய் நீயே அமுதின் சுவையாய் அமைந்தாய் நீயே ! என்னையும் தோழனாய் ஏற்றாய் நீயே பேதையேன் பிழையெலாம் பொறுத்தாய் நீயே இல்லறத்தில் என்னை உய்த்தாய் நீயே நின்னைப் பிரிந்து எங்ஙனம் வாழ்வேன் ?? என்று முறையிட்டார்.

“ ஏழ்இசையாய் இசைப்பயனாய்

இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யும்

துரிசுகளுக்கு உடனாகிய மாழைஒண்கண் பரவையைத்தந்து ஆண்டானை மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன்

என்ஆரூர் இறைவனையே’

என்று இனிய பாட்டிசைத்துப் போற்றினார்.