பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் 76

பதிந்துவிட்டன. பழுமரச் சோலைகளில் அமர்ந்து திருப்பாசுரங்களைக் கிளிகள் அழகாகப் பாடுவதும் அங்குள்ள பூவைகள். அவற்றை இன்புற்றுக் கேட்பதும் வழக்கமாய்விட்டது.

இங்ஙனம் தமிழ்ப் பாட்டைப் பாடியும் கேட்டும் இன்புற்ற கிளியையும் பூவையும் நயந்து நோக்கினாள் ஒரு நங்கை தமிழ் மாலை அணிந்த தலைவரிடம் அப்பறவை களைத் துரதனுப்பி அவர் அருளைப் பெற ஆசைப் பட்டாள். ‘திரு ஆரூர்ப் பெருமான் உள்ளம் கவர்ந்த கிள்ளைகாள் பாட்டின் சுவையறிந்த பூவைகாள் அறமே கண்ணாக உடைய அப் பெருமானிடம் போந்து எனக்காக ஒன்று சொல்ல வல்லிரோ? அவரை மறக்கும் வகையறியாமல் மியங்குகின்றது என் மனம் உறக்கமின்றி உழல்கின்றது என் கண் மெலிந்து வாடுகின்றது என் மேனி. இந்த நிலையை ஈசனாரிடம் எடுத்துரைத்து என் வாட்டம் திருத்த வல்லிரோ? -

“பறக்கும்னம் கிள்ளைகாள்

பாடும்எம் ழ்வைகாள் அறக்கண்ணன் னத்தகும்

அடிகள ரூரரை மறக்ககில் லாமையும்

வளைகள்நில் லாமையும் உறக்கமில் லர்மையும்

உணர்த்தவல் லீர்களே”

என்று தன் குறையை முறையிட்டாள்.

திருவாரூரிலே பிறந்தும் வாழ்ந்தும் பேரின்ப நிலை யடைந்த பெரியார் பலர். நந்தி அடிகளும் தண்டி அடிகளும், கழற்சிங்கரும் கலிக்காமரும், அந்நகரில் செயற்கரிய பணி செய்து சிவனடி சேர்ந்தனர். அருமையான அறப் பணி ஆற்றிவரும் தருமபுர ஆதீனத்தை நிறுவிய