பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகார் நகரம் 3{} பெருமையாக்கிக்கொண்ட பட்டினத்தடிகள் நெஞ்சுருகிப் பாடுகின்ற ஒரு பாட்டிலே இச் செஞ்சொல் பயின்றுள்ளது.

“செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல் அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.”

என்பது அவர் திருவாக்கு. ஆங்கிலச் சொல்லாகிய மார்க்கட் வந்து புகுந்து அங்காடியை வழக்காற்றினின்றும் அகற்றிவிட்டது. சென்னையிலுள்ள அந்திக் கடைத் தெருவை அல்லங்காடி என்றும், மூர் மார்க்கட்டை மூரங்காடி என்றும் அழைத்து நாம் இன்புறும் நாள், எந்நாளோ?

இறவாத புகழ் உடைய ஆன்றோர் பலரை ஈன்ற பெருமையும் புகார் நகரத்திற்கு உண்டு. கற்பின் செல்வி யாகிய கண்ணகியை ஈன்றளித்த திரு நகரம் புகார் நகரமே! அம்மங்கையை மணந்து, சில காலம் மனையறம் புரிந்து, பின்பு மாதவியின் மையலிலே தாழ்ந்த கோவலனைக் கானல் வரிப்பாட்டால் பிரித்து, சிலப்பதிகாரக் காவியத்திற்கு அடிப்படை கோலிய நகரமும் அதுவே. புனித மாதவன் என்று புகழப் பெற்ற புத்த சங்கத் துறவியாகிய அறவனவடிகள் வாழ்ந்த நகரமும் அதுவே. ‘இல்லையே என்னாத இயற்பகையார் “ என்று தேவாரத்திலே போற்றப்பட்ட திருத்தொண்டரைத் தந்த நகரமும் அதுவே.

திருமாவளவன் அரசு புரிந்த காலத்தில் கலைமகளும் திருமகளும் புகார் நகரத்தில் களிநடம் புரிவாராயினர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் மன்னன் ஆதரவு பெற்று முறையாக வளர்ந்தன. வரிசையறிந்து பரிசளித்த வளவனை நாடி வந்தனர் நல்லியற் கவிஞர். பட்டினப்பாலை பாடிய கடியலூர்க் கவிஞருக்குத் திருமாவளவன் பதினாறு லட்சம் பொன் பரிசளித்தான் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது. இன்னிசைக்