பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. உறையூர்

‘ உயர்வும் தாழ்வும் ஒரு வழி நில்லா என்பது ஒர் உண்மையான பழமொழி. உயர்ந்தவர் தாழ்வர்; தாழ்ந்தவர் உயர்வர். இஃது உலகத்து இயற்கை. அவ்வாறே பேரூர் சிற்றுனர் ஆகும்; சிற்றுரர் பேரூர் ஆகும். கொங்கு நாட்டில் உள்ள பேரூர் சிற்றுரர் ஆயிற்று. தமிழ் நாட்டில் சிறிய ஊராய் இருந்த சிற்றுார் பெரிய ஊராகி ஒரு மாவட்டத்தின் தலைமைப் பதியாக இன்று விளங்குகின்றது.

காவிரியாற்றின் கரையிலே முன்னாளில் பெரிய ஊர்கள் பல இருந்தன. அவற்றுள்ளே தலைமை சான்றது உறையூர் என்னும் திருநகரம். அதுவே சோழ நாட்டின் பழைய தலைநகரம். “ ஊர் எனப்படுவது உறையூர்” என்று அதன் சீர்மையைப் பாராட்டினர் செந்தமிழ்ப் புலவர். வடமலை என்னும் பெருமலையில் வேங்கைக் கொடியை நாட்டிய திருமாவளவன் வழிவந்த சோழ மன்னர்கள் உறையூரில் அரசு வீற்றிருந்தனர்.

தமிழ்ச் சோழர் வாழ்ந்த அத்தலைநகரில் கலைமகளும் திருமகளும் கலந்துறைவாராயினர். “ கார் ஏறும் கோபுரமும் கதிர் ஏறும் சோலைகளும், தேர் ஏறும் வீதிகளும்” அத் திருநகரின் கண்கொள்ளாக் காட்சிகள் என்று பொய்யறியாப் புலவர் ஒருவர் பாடினார்.

செழுமை வாய்ந்த உறையூரிலே பிறந்த கோழிகளும் சிறந்த வீரம் வாய்ந்து விளங்கின. அக்கோழிகள் பாய்ந்தும் பறந்தும், படிந்தும் புடைத்தும் நெடும்போர் புரியக் கண்டு மகிழ்ந்தனர் பண்டை அரசர்கள். பகைவர்மீது படை