பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் 86

அக் குலத்தார்க்கு அழியாப் பெருமை அளிக்கத் தோன்றினார் ஒரு பானர். இளமையிலேயே அவர் இசைக்கலையை ஆசையோடு கற்றுணர்ந்தார். யாழ் இசையில் கைதேர்ந்த அப்பாணருக்கு ஏழிசையும் இனங்கிப் பணி செய்தன. காவிரியாற்றின் நடுவே பள்ளி கொண்டருளும் திரு அரங்க நாதனைக் கண் குளிரக் கண்டு பண்ணோடு பாட்டிசைக்க ஆசைப்பட்டார் அப்பானர். தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த பாணனுக்கு அவ் உரிமை கிடையாது என்று அறிந்து நெஞ்சம் உருகினார். காவிரியாற்றின் தென்கரையிலே திருக்கோயிலுக்கு எதிரே தின்று, கல்லும் புல்லும் கரைந்து உருக நாள்தோறும் மெய் மறந்து தமிழ்ப் பாட்டிசைத்தார். அவர் பெருமையை அறியாதார் சிலர் கடுமொழி பேசினர்; கல்லெடுத்து வீசினர். இவ்வாறு ஒறுத்தாரை எல்லாம் பொறுத்தார் திருப்பாணர். அரங்கநாதன் அருளால் சாதிச் செருக்கு அறுத்தது: பாணர் பெருமை சிறந்தது. பண்டைப் பழக்கம் வீழ்ந்தது; பண்பாடு வென்றது.

பெரிய கோயிலின் உள்ளே சென்று திருவரங்கநாதன் பன்னி கொண்டி கோலத்தைப் பார்த்தார் திருப்பானர்; பரவச முற்றார்; ஆனந்தக் களிப்பினால் ஆடினார், பாடினார்.

“அண்டர்கோன் அணி

அரங்கன்என் அமுதினைக் க்ண்டகண்கள் மற்று

ஒன்றினைக் காணாவே ”

என்று அவர் இசைத்த தமிழ்ப் பாட்டைக் கேளாத செவி என்ன செவியே !

உறையூரிலே தோன்றி, இறவாத இன்பத் தமிழால் இறைவனைப் போற்றி, பிறவாத பேறு பெற்ற பாணர் பெருமானைப் பாண் பெருமாள் என்றும், திருப்பாண்

ஆழ்வார் என்றும் தமிழகம் வழிபடுகின்றது.