பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிராப்பள்ளி - 88

என்று பெயர் பெற்றது. இச்செய்தியை அறிவிக்கின்றது அம் மலையில் உள்ள கல்லெழுத்து.

ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னே தமிழ் நாட்டில் கடுமையான மதப்போர் மூண்டது. சைவமும் வைணவமும் ஒருபால், சமணமும் சாக்கியமும் ஒருபால் நின்று நிகழ்த்திய நெடும் போரில் மதவெறி கொண்ட மன்னரும் மாந்தரும், நெறி முறை தவறி நடந்ததும் உண்டு பல்லவ மன்னனாகிய மகேந்திரவர்மன் திருநாவுக்கரசரைத் துன்புறுத்திப் பின்பு அவர் பெருமையை அறிந்து சமண சமயத்தைத் துறந்தான்; சைவ சமயத்தைத் தழுவினான். மதவெறி கொண்டு சமணப் பள்ளிகளை இடித்தான், சிவாலயங்கள் எடுத்தான்.

சிராப்பள்ளிச் சிவன் கோயில் அம் மன்னன் எடுப்பித்த ஆலயங்களில் ஒன்று என்பது அங்குள்ள கல்வெட்டு களால் விளங்குகின்றது. சமணப் பள்ளியை அரசன் அழித்த போதும் நெடுங்காலமாக வழங்கி வந்த சிராப்பள்ளி என்ற பெயர் மாறவில்லை. எனவே, அம்மலையின்மீது கோயில் கொண்ட சிவபெருமானைச் “ சிராப்பள்ளிக் குன்றுடை யான் ” என்று தேவாரம் பாடுவதாயிற்று. தேவாரப் பாமாலை பெற்றமையால் சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி ஆயிற்று’ .

மகேந்திரவர்மன் நிறுவிய சிராப்பள்ளிச் சிவாலயத்தை திருதாவுக்கரசர் சிந்தையாரத் தொழுதார்; அரசன் உள்ளத் திலும் சமண முனிவர் பள்ளியிலும் சிவ மணம் கமழச் செய்த இறைவன் கருணையை நினைந்து இன்பக் கண்ணிர் உகுத்தார்; தாயாகவும் அமைந்த தயாபரன் என்று சிராப்பள்ளியில் கோயில் கொண்ட ஈசனைப் போற்றினார்.

“ தாயுமாய் எனக்கே

தலைக் கண்ணுமாய்ப் பேய னேனையும்

ஆண்ட பெருந்தகை”