பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிராப்பள்ளி 90

அருளைப் பெற விரும்பி அவர் பாடிய பாடல்கள் படிப்போர் உள்ளத்தை உருக்குவனவாகும்.

“ பாராயோ என்னைமுகம்

பார்த்தொருகால் என்கவலை தீராயோ வாய்திறந்து

செப்பாய் பராபரமே” என்ற பாட்டைப் பாடாதார் தமிழ்நாட்டில் உண்டோ?

திருச்சிராப்பள்ளிக்குப் பெருமை அளித்த தமிழ்க் கவிஞருள்ளே தலைசிறந்தவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. காவிரியாற்று வெள்ளம்போல் அவர் உள்ளத்திலே பொங்கி எழுந்தது தமிழ்க் கவிதை. தமிழ் மொழியில் ஆர்வம் உடைய மாணவர்க்குத் தாயும் தந்தையுமாய் அமைந்து அறிவை ஊட்டினார் அப்பெரியார். தமிழகத்தில் அறிவுடையோர் சிந்தையிலும் சென் னியிலும் வீற்றிருக்கும் சீர்த்தி பெற்ற சாமிநாதையர், பிள்ளையவர் களின் மாணவர்களுள் ஒருவர் என்றால் அப்புலவர் பெருமானது சீர்மை பேசுந் தரத்ததோ?

“அருத்திமிகும் எனைஅருகில்

இருத்திஅருந் தமிழ்நூல்கள்

அறைந்து பின்னர்த் திருத்துறைசை அமர்திருசுப்

பிரமணிய அருட்கடலின்

திருமுன் சாரப் பொருத்திஅனை யான்கருணைக்கு இலக்காகி இருபயனும்

பொருந்தச் செய்தோன் மருத்தபொழில் சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தர

நாவலர் ஏறே”

என்று தம்மை ஆட்கொண்டு உருப்படுத்திய குருநாதனை அகனமர்ந்து போற்றினார் ஐயர் பெருமான்.