பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவரங்கம் - 94

என்று அவர் திருக்கோலத்தை எழுதிக் காட்டினார் ஓர் ஆழ்வார். தென்னாடு தெய்வத் தமிழ் வழங்கும் நன்னாடாதலால் திருமாலின் திருமுகம் தெற்கு நோக்கி அமைந்தது. வடநாடு “ஆழ்வார்கள் ஈரச் சொல்லும் நடை யாடாத தேசமாகையாலே, அத்திக்கைத் திருத்தும் போது பின்னழகெல்லாம் வேண்டும்” என்று பெருமாள் பின்பு காட்டினார் என்று திருக்குறிப்பின் பொருளை விளக்கினார் வடநூற் கடலை நிலை கண்டுணர்ந்த பெரியவாச்சான் பிள்ளை, -

இவ்வாறு தென் திசையை வாழ்வித்த திருவரங்கம் தென்னரங்கம் என்று அடியார்களால் போற்றப்படுகின்றது. தமிழகத்திலே தென்னரங்கமும் உண்டு : பொன்னரங்கமும் உண்டு என்று பாடினர் தமிழ்க் கவிஞர்கள். தென்னரங்கத்திலே இறைவன் கண் வளர்கின்றான்; பொன்னரங்கத்திலே ஈசன் களிநடம் புரிகின்றான். தென் அரங்கநாதனும் பொன் அரங்கநாதனும் இருவரல்லர்; ஒருவரே என்னும் உண்மையை இனிது உணர்த்தினார் பொய்கை ஆழ்வார்.

“பொன்திகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும்

நின்றுலகம் தாய நெடுமாலும் - என்றும்.

இருஅரங்கத் தால்திரிவ ரேனும் ஒருவன்

ஒருவன்அங்கத்து என்றும் உளன்” என்பது அவர் திருப்பாட்டு. தென் அரங்கம் என்றும் பொன் அரங்கம் என்றும் பேசப்படுகின்ற இரு அரங்கத்திலும் உள்ள இறைவன் ஒருவனே என்னும் உயரிய கருத்தைத் தெள்ளத் தெளிய உணர்த்தினார் பொய்கையார். இங்ஙனம் இருமையில் ஒருமை கண்ட பெருமை பழந்தமிழ் நாட்டின் பண்பாட்டிற்கு ஒரு சிறந்த சான்றாகும்.

தென் பாண்டி நாட்டுப் புதுவையம்பதியிலே தோன்றினாள் ஒரு தெய்வப் பாவை, அழகின் கொழுந்