பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 ஆற்றங்கரையினிலே

வெள்வளை சோரத் தன் உள்ளங் கவர்ந்த அக் கள்வனையே நினைந்து உருகுவாள். ‘

கோதையின் காதலை அறிந்த அரங்கநாதன் மனம் இரங்கினான். அன்பினால் அவள் சூடிக் கொடுத்த மனமாலையும் அப் பெருமானுக்கு உகந்ததாயிற்று. இவ்வாறு தன் திருமகளின் கருத்தறிந்து முடித்த கருணைமாயனை மனமாரப் போற்றினார் பட்டர்பிரான்.

“ ஒருமகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்

செங்கண்மால் தான்கொண்டு போனான்”

என்று திருமகள் கணவனாகிய திருமாலை வாயார வாழ்த் தினார்.

கோதை என்றும், ஆண்டாள் என்றும் தமிழ்நாடு போற்றும் தெய்வப் பாவை பாடியருளிய திருப்பாவை சங்கத் தமிழ் மாலையாகத் திகழ்கின்றது. பூமாலை சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் பாடிக் கொடுத்த நற்பாமாலையைப் போற்றிப் புகழ்ந்தனர் ஆன்றோர்.3

திருவரங்கநாதனுக்குத் திருத்தொண்டு செய்த அடியார்களுள் சிறந்தவர் விப்பிர நாராயணர் என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வார். பள்ளி கொண்டருளும் திருவரங்கப் பெருமானைத் துயிலுணர்த்தும் பான்மையில் இவ் ஆழ்வார் பாடியருளிய திருப்பள்ளி எழுச்சி என்னும் பாமாலை தெய்வத் தமிழ் மனம் கமழ்வதாகும்.

திரு அரங்கநாதனைச் சேவிக்கும் செல்வமே செல்வம் என்று தெள்ளத் தெளிய உணர்த்தினார் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார். பச்சைப் பசு மேனியனே பவள் வாயனே கமலக் கண்ணனே : அச்சுதா அமரர் கோவே ! ஆயர்தம் கொழுந்தே ‘ என்று அருந் தமிழால் அருச்சனை