பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 8: தன்னேரில்லாத வகை உழைக்கின்றேன்! தாரணியில் தமிழே மேன்மைப் பன்னலமும் பெருகிடப் பேராசை கொண்டே பணிசெய்தேன்! பகைமை வென்றேன்!” என்று கவிஞர் கூறுகிறார். பெருங்கவிக்கோ ஓயாத உழைப்பில் மகிழ்ச்சி காண் பவர். பிறருக்கு உதவி புரியும் நல்ல மனம் பெற்றவர். இவை பற்றி அவர் ஒரிடத்தில் குறிப்பிடுகிறார் 'ஒடியாடித் தினம் உழைத்து மகிழ்கிறேன் ஓய்வுக்கு நேரமில்லை-பாக்கள் பாடித் தேடித்தினம் பண்பட்டுத் தேர்கின்றேன் பயணம் முடியவில்லை. பிறர்க்குதவி செய்யப் பெருங்கேடு வந்தாலும் பின்னுக்குப் போகவில்லை-நெஞ்சம் அறந்தவறிப் பழி ஆக்க நினைப்பினும் அதனை யான் செய்யவில்லை, ஊரார் பணத்திலே நீராடி என்னையான் ஊட்டி வளர்க்கவில்லை-யானும் பேராக வேண்டுமென்றே வஞ்சகர் மார்பினைப் பிடித்துத் தழுவ வில்லை. உண்மை நெறியுண்டு உறுதிப் பணிவுண்டு ஊக்கப் பெருக்கமுண்டு-சிங்கத் திண்மைக் குணத் தமிழ் செயல்வீர வாளுண்டு தீமைக் கொலைகளுண்டு!” அவரது துணிவு குறித்துக் கவிஞர் இவ்விதம் பாடு கிறார்.