பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


95 வல்லிக்கண்ணன் உலக இனத்தின் ஆணிவேர்நம் உரிமை நாட்டப் புறப்பட்டேன்-நம்முள் கலகம் மூட்டிப் பார்த்தவர் தம் கதை முடிக்கப் புறப்பட்டேன்! வையகத்தின் நாவசைத்த வண்டமிழ்த்தாய் ஓங்கவே-கோடிக் கையசைத்துக் கயமை சாடும் கருத்தும் ஏந்திப் புறப்பட்டேன்!” என்று கொள்கை முழக்கம் செய்கிறார் கவிஞர். தனது ஆற்றலை அவர் நன்கு உணர்ந்திருப்பதால், * விஞ்சி எழி கவிக்கோ நான் எவன் தயவும் தேவை இல்லை என்று தலைநிமிர்ந்து முன்னேறும் தைரியம் அவர் பெற்றிருப்பதால் உறுதியாகப் பாட முடிகிறது. ఆబ్రీథ్న!! { షో, ஆற்றல் தான் எனக்கு அருந்துணைவன்! - உயிர் நண்பன்! கூற்றம் எதிர்பார்த்தாலும் கொள்கை தனக்காகப் போராடி அதனை பொடிப் பொடி யாய்ச்செய்யும் வீரம் உடையேன்! விவேகம் மிக உடையேன்! நஞ்சாய்ப் பழகும் நரித்தனக் காரருக்கும் கொஞ்சும் அன்பை ஊட்டிக் கொடுப்பவன் நான்! பாய்ந்து வரும் பகைக்கும் பண்பாடு கெட்ட * - -- வாககுழ நாய்கீழ் வாழும் நன்றியிலாத் தீயர்க்கும் ஏய்ப்போர்க்கும் ஈன எத்தர்க்கும் கூடயான் தாய்ப்பால் கொடுக்கும் தகுதியை வளர்ப்பவன் நான்' என்று அவர் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்கிறார்