பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இ8 வல்விக்கண்ணன் உண்மைக்கும், அன்புக்கும் உயரிய பண்புக்கும் திண்மைக்கும் என்திறமைச் செல்வாக்கு வளர்வதற்கும் காரிகை அன்னவளே கடவுளாய் நிற்கின்றாள்! நல்லோர் இதயத்தில் நடமிட்டு, நலம் தருகின்ற கவிதைமகள் தான் அவருக்கும் வலிமை தருவதாக கவிஞர் நம்புகிறார். அவருள் ஊற்றெடுத்துப் பொங்குகிற கவிதை ஆற்றலும், அது தரும் தன்னம்பிக்கையும் தான் பெருங் கவிக்கோவிற்கு வலிமை சேர்த்துள்ளன என்று கூறலாம். அவருடைய மனச்சாட்சியின் படி நடப்பவர் கவிஞர். அந்த அகச்சுடர் வெல்வதற்காகவே அவர் அய்யப்பனை நாடி சபரிமலைக்குப் போகிறார். இதை அவரே கூறுகிறார்'பொய்யுரைப்பார் பக்கமென்கால் போகவில்லை பொறாமை சேர் நெஞ்சரை யான் மதிக்கவில்லை நெய்யுரைத்து வாயாலே கையால் நஞ்சை நேயமுடன் ஊட்டுகின்றார் தம்மைக் கண்டும் அய்யகோ என்றே யான் அலறவில்லை ஆணவத்தை மதிக்கவில்லை! இருந்த போதும் அய்யப்பன் கோயில் ஏன் செல்வாய் என்பீர் அகச்சுடராம் மனச்சாட்சி வெல்லச் செல்வேன்’ பெருங்கவிக்கோவின் உள்ளத்து நேர்மையும், அஞ்சாத போக்கும் வெள்ளைமனமும் அவருடன் பழகிய வர்களுக்கு நன்கு தெரியும். தன்னலம் கருதி எப்படி யெல்லாமோ நடித்து வாழ்க்கையில் வெற்றி பெற முயலும் மனிதர்கள் மத்தியில், அவருடைய நற்பண்புகள் காரணமாக, அவர் பெருந்துன்பங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதற்காக அவர் மனம்சோர்வதில்லை. இதையும் கவிஞர் தன் கவிதையில் பதிவு செய்திருக்கிறார்: