பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வல்லிக்கண்ணன் ஒட்டாண்டி ஆகின்றான், உண்மை உள்ளோன் உதைபட்டுச் சாகின்றான், பொய்யைத் தம்மின் கூட்டாளியாய்க் கொண்டோன் மஞ்சம் கொஞ்சிக் குளிக்கின்றான்! அந்தந்தோ வெட்கம் வெட்கம்!” சமூக முரண்பாடுகளை கவிஞர் இவ்வாறு படம் பிடித்திருக்கிறார். இப்படி வாழ்க்கை நிலைமைகள் இருப்பதற்கு இறைவனே காரணம்; எல்லாம் இறைவன் செயலே என்று மக்கள் நம்புகிறார்கள். கஷ்டப்படு கிறவர்களும் புலம்புகிறார்கள்; சுகபோக வாழ்வு அனுபவிக்கிறவர்களும் அவ்வாறே சொல்கிறார்கள். இது எப்படி உண்மையாக இருக்க முடியும்? இது பற்றி சிந்திக்க வேண்டுகிறார் கவிஞர். 'வஞ்சச் செயலால் வாழும் சிறுமதியர் தஞ்சமாய் எல்லாம் தனி இறைவன் செய லென்பார்: கூடிக் கெடுக்கும் குணங்கெட்டார் கூடத்தான் நாடியே எல்லாம் நனி இறைவன் செயலென்பார்! பேய்க் குணத்தார், பித்தலாட்டக் கொடியவர்கள் வாடிக்கையா யெல்லாம் வாழிறைவன் • . செயலென்பார்: அடுத்துக் கெடுப்பவர்கள், அடங்காது நடப்பவர்க்ள் படுத்துக் கிடந்தே பால் தேனும் பழரசமும் விதவிதமாய் உண்பவரும் வெல் இறைவன் --- - செயலென்பார்! கூனிக் குறுகிக் கும்பி வயிற்துக்காக -