பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 9 197 தால் தெளிவு பெறுவோராகவும் அவர்கள் இருத்தல் வேண்டும். பகுத்தறிவே காதினுக்குக் கதவும் ஆகும் பாசாங்குக்காரர் பலர் வருவார் உன்போல் மிகுத்தறிவு உள்ளவர்கள் இல்லை; நீயே மேலாளர் எனச்சொல்லி ஏற்றிப் பின்னர் தகுந்தமுறை பயன்படுத்திச் செயல் முடித்துத் தரங்கெட்டுப் போய் விடுவர்! அதனால் இந்த வகைகெட்ட மனிதர்தம் ஏமாற்றுச் சொல் மயங்காத செவிவேண்டும் மாண்பும் வேண்டும்’ என எச்சரிக்கிறார் கவிஞர். நாடு நலம் பெறுவதற்கு மாண்புகள் பல ஓங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். முன்னேற்றம் எங்கும் ஏற்படுவதற்கு என்ன என்ன வேண்டும் என்றும அவர் அறிவுறுத்துகிறார். "மாண்பு பல இந்நாட்டில் ஓங்கவேண்டும் மலர் அறிவு நிலைபெறவே வேண்டும்! காண் இன்பம் எல்லாம் இங்கெல்லோருக்கும் கண்டிப்பாய்த்தான் கிடைத்தல் வேண்டும் வேண்டும் கூண்டினிலே வாழ்கிளியாய்ப் பிறரை எண்ணிக் குரங்காகத் தானாகிக் கொடுங்கோல் செய்யும் மூண்டஇகழ் மூர்க்கரினை ஒறுக்க வேண்டும் முன்னேற்றம் நாள்தோறும் வையம் வேண்டும் வையத்தில் பொய்புரட்டு மடியவேண்டும் வரலாற்றில் தமிழர்புகழ் ஓங்கவேண்டும்