பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 109 வறுமை யெலாம் நீங்கவேண்டும் வையகமே பகிர்ந்துண்ணும் தறுகண்மை வாழவேண்டும் தலையான பண்பு வேண்டும்’ உலகமெல்லாம் ஒரு குடும்பம் போல் வாழ வேண்டும். பகைமை கொண்டு ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்கும் போக்கு நீங்க வேண்டும். நிலையான அறங்கள் வளர்ந் தோங்க வேண்டும்.

பட்டினிகள் ஒழிய வேண்டும்

பகிர்ந்துண்டே வாழ வேண்டும் கெட்டவர்கள் திருந்த வேண்டும் கேவலங்கள் மறைய வேண்டும்’ இவையெல்லாம் ஈடே ற வரம் வேண்டும் என இசைக் கின்ற பெருங்கவிக்கோவின் உள்ளம் உண்மையான மனித உள்ளம் என்பதில் ஐயம் உண்டா? சாத்திரத்துக் குப்பைகளை எருவாக ஆக்கி சமயங்கள் வேற்றுமையைக் குழிவெட்டிப் போட்டு கோத்திரங்கள் சாதிமுறை மண்ணெடுத்து மூடி குறிக்கோளில் மதங்களுடை வேற்றுமையை வீழ்த்தி ஏத்து புகழ் ஒழுக்கநெறி உண்மைபுகழ் அன்பு உயிர்வாதை செய்யாத குணங்கள் பின்பற்றித் தீத்திறங்கள் வாராத சமரசத்தின் மார்க்கத் தெளிவொன்றே உலகிணைக்கும்’ என்று வள்ளலார் வழியில் முன் செல்வதில் ஆர்வம் கொண்டுள்ளார். பெருங்கவிக்கோ. -