பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பெரும் திறனாய்வு அறிஞர் வல்லிக்கண்ணன் அவர்களை மன-மொழியால் வணங்குகிறேன். நம் நாட்டு இதழ்கள் தக்கவர்கள் செய்யும் பணி களைப் போதிய அளவு மதிக்காதது உண்மை, ஆனால் இதற்காக நாம் வருந்த வேண்டுவதில்லை. இயற்கையும் காலமும் யார் மறைத்தாலும் மறைக்காமல் தக்கவர்களை அடையாளம் காட்டியே தீரும், திருவள்ளுவர்-கம்பர் வள்ளலார் போன்றவர்களை இதழ்களா வளர்த்தன! காலம் தானே உலகுக்குக் காட்டியது: எனவே, கவிஞர்கள் எதையும் எதிர்பாராது பணி செய்தால் கவிதை வாழ்வு தரும். அவ்வாழ்வும் வியப்பின் உச்சியாகும். எல்லாவற்றிற்கும் நாம் நம்மை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும். - 7-1-95 ஆம் நாள் தமிழுக்காகத் திருச்சி சிறையில் அடைப்பட்டு விடுதலை ஆகி, காலை ஐந்து மணிக்கெல் லாம் எழும்பூர் பேருந்து நிறுத்தத்தில், நல்லார் பத்மனாபன் அவர்களோடு நின்று கொண்டிருந்தேன். அதுபோது, ஒரு இளைஞன் (21 அகவை) ஒடி வந்து 'ஐயா நீங்கள்தான் பெருங்கவிக்கோவா’ என்றார். ஆம் என்று பேசிக் கொண்டிருத்த போது நான் எழுதிய நூற்கள், என் தமிழ்ப்பணி பற்றி மிகவும் விரிவாகப் பேசின்ார். பல சேய்திகள் அறிந்திருந்தார். இப்படிப் பலர் தக்கவர்களை அறிந்துள்ளனர். எனவே நம் இளைய பிள்ளைகளுக்கு அறிவு வளர்சசி உள்ளது. § உழைத்தால் உழைப்புக்கு மதிப்பு உண்டு என்னைச் சந்தித்துப் பாராட்டிய அண்ணா கண்ணன் பொங்கல் அன்று என் இல்லம் வந்து எனக்கு வாழ்த்தித் தந்த கவிதையையும், கவிமாமணி கவிதையையும் இத்துடன் வெளியிட்டிருக்கிறேன். ஒத்துழைத்த அனைவர்க்கும் இதய நன்றி, அன்பன், வா. மு. சேதுராமன்