பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0.111 பெருங்கவிக்கோ சிந்தனையின் புதிய வீச்சும் புதுமை நோக்கும் இதில் சுடர் விடுகின்றன. துறப்பது பெருமை தான்; தகுதி சேர்த்து, வாழ்க்கை வசதியும் வளங்களும் அதிகமான பிறகு துறக்க வேண்டும்; அச்செயல்தான் மாண்புடையதாகும் என்று கவிஞர் கருதுகிறார். கோடி கோடியாகக் குறையாத பெருஞ்செல்வம் தேடித்தேடியே செம்பொருள் குவியுங்கள் குவித்த பொருளை குவலயத்திற் களியுங்கள் தவித்த நெஞ்சத்தால் தவப்புத்தன் போல் துறந்து செல்லும் நிலையெண்ணிச் சிறப்பைக் காண் போமே! வெல்லும் நிலையிதே வேறு நிலையானறியேன்!” போறத்தைச் சிந்தியுங்கள் பெருங்கொடைகள் செய்திடுங்கள்!" என்று அவர் எடுத்துச் சொல்கிறார். பாதகமில்லாத வாழ்வுதான் நிலையாக நிற்கும். யார் தீமை செய்தாலும் நாசமாய்ப் போவார்கள் யார் நன்மை செய்தாலும் நற்பெருமை அடைவார்கள் இவை தான் நீதி, இதை மனசில் இருத்துங்கள் என்றும் அவர் அறிவிக்கிறார். "அன்பு நலம் நெஞ்சத்தில் சுரக்க வேண்டும் அறிவு நலம் எங்கனுமே சிறக்க வேண்டும் தன்னலமில் உயர்வுநெறி தழைக்க வேண்டும் தமிழனெனில் தமிழுயர்வை எண்ண வேண்டும் இன்னலிலே உதவியவர் போற்ற வேண்டும் இன்ப துன்பம் சமநிலையில் வாழவேண்டும்’ என்றும் நலம் மிகுந்த வாழ்வின் தன்மைகளை சுட்டிக் காட்டுகிறார் பெருங்கவிக்கோ, -