பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வல்லிக்கண்ணன் சளைக்கக்கூடாது என்று உணர்த்த விரும்புகிறார் பெருங் கவிக்கோ. உலக நியதிகளையும் வாழ்வின் முரண் களையும் விளக்கி, 'நெஞ்சே மலைக்காதே’ என்ற பாடலை அவர் பாடியிருக்கிறார். முடிவாக அவர் தைரியம் ஊட்டுகிறார். 'எல்லையில்லாத சோதனையில்லிறை எண்ணிவாய் மூடாதே-உன்றன் வல்லமை முயற்சி காட்டி வெல்லாமல் பேடியாய் வாடாதே! துன்பம் வந்தால் சோர்ந்து போகாதே துயரச் சேற்றினிலே-மலர்வதோ இன்பத் தாமரை இதை மறவாதே இதயமே முன்னேறு!" தோல்வி கண்டு துவண்டு விடாமல் சுடர் முகம் துர்க்கு! வெற்றிக்குக் கால் கொள்வது உனது உழைப்பு தான். எனவே கடமை மறவாதே என்று கவிஞர் ஊக்கம் அளிக்கிறார். - வாழ்வில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய பண்புகள் குறித்து பெருங்கவிக்கோ பாடியுள்ள கவிதை என்றும் நினைவில் நிறுத்த வேண்டிய நல்லுரை யாகும். அவர் சொல்கிறார் - "கடல் போன்ற எண்ணம் வேண்டும் கருத்தெல்லாம் பிறருக்காகத் தடம்புரளாத வாறே தகைவளம் காக்க வேண்டும் திடம் வேண்டும் திறமை வேண்டும் சேராறு தம்மை வாரி உடன்கொண்டும் அலைகள் வீசும் ஓயாத பணியும் வேண்டும்!