பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 119. கிறார். காடு குறித்துக் கவிதை இசைக்கும் முன்னர் அவர் பொதுவாக விவரிக்கிறார் "வானாகி அழகுத்தாய் சிரித்ததாலே வையத் தாய் சிரிக்கின்றாள்! வளைந்து சூழும் கோனாகிக் காற்றென்பான் வீசும் அன்பால் குவலயத் தாய் சிரிக்கின்றாள்! இன்பம் இன்பம் ஊனாகி உயிராகி உலகம் முற்றும் உள்ளதெல்லாம் இயற்கைத் தாய் சிரித்து நின்றாள்! தேனாகி நீராகித் தீயும் ஆகித் திக்கெல்லாம் சிரிக்கின்றாள்! விந்தை விந்தை! விண்ணகத்தில் கதிரவனாய், மதியாய் நின்று விளையாடி ஒளிசிந்தி நகைத்து நின்றாள்! மண்ணகத்தில் வான்மழையைப் பெற்றே இன்ப மலர்ச்சியினை வளர்ச்சியினை விரித்து நின்றாள் கண்ணகத்தில் கடல்மலையில் காணும் காட்சிக் கவின் பொருள்கள் அனைத்திலுமே திளைத்து நின்றாள்" என்று கவிஞர் வியக்கின்றார். மேலும் அழகு சிரிக்கும் விந்தைகள் பலவற்றைக் கூறி. விட்டு நயமாக இசைக்கின்றார் : அழகைத் தான் உயிரென்றால் உடலே வையம்! ஆகும் இவ்விரண்டாலே அகிலம் உய்யும் விழைகின்ற இன்பத்துள் அழகிருப்பாள்! விரும்பாத துன்பத்தும் அவள் சிரிப்பாள்!