பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 12 இன்னும் காட்டில் கிடைக்கம் பொருள்கள், வாழ்கிற பறவைகள் மிருகங்கள், விஞ்சும் அழகு நிறைந்த காட்டின் பத்தை எல்லாம் அழகாகச் சுட்டிக் காட்டுகிறார் கவிதையில், அப்படி இயற்கை வளங்களையும் அழகையும் பாட முற்பட்ட போது கூட, மனிதர்கள் செய்யும் கொடுமை பற்றி வேதனையோடு சுட்டத் தவறவில்லை அவர் "நாட்டகத்தில் நடக்கின்ற கொடுமை-அன்பு நல்லோரை நடுங்கச்செய் கொடுமை பண்பை ஈட்டுகின்ற அறிவோர்க்குத் தீமையாலே ஈனத் தனம் செய்யும் கொடுமை-இன்பக் காட்டகத்தே கிடையாது! கரடி சிங்கம் கடுவரியுள் புலியுடனே மான்கள் கூடக் கூட்டுறவாய் வாழ்கையில்ே மனிதா நீயோ, கொடுமைக்கே வாழ்கின்றாய்! வெட்கம் வெட்கம்! பறவையினம் ஒன்றாகக் கூடும் காட்சி பங்கயப்பூ மலர்ந்திருக்கும் காட்சி ஒக்கும் உறவாகி அவையெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தே உள்ளன்புக் கிலக்கணமாய் வாழும்! மாந்தர் கரவுக்கே அங்கிடமே இல்லை; பொல்லாக் கயமைக்கே இடமில்லை! திருட்டும் இல்லை! புறங் கூறும் நிலையில்லை! கீழ் மேல் என்னும் பொல்லாங்கும் அங்கில்லை! பொறாமை இல்லை!" என்று சமுகத்தில், நாட்டில் நிலவுகிற சிறுமைகளை பெருங்கவிக்கோ சாடுகிறார் .