பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 9 123 க்விஞர் ஒரு உண்மையை எடுத்துச் சொல்ல முனை கிறபோது, அடுக்கடுக்காய் பல உவமைகளை அழகுறக கூறிச் செல்வதை அநேக இடங்களில் காண முடிகிறது. அவை தெளிந்த நீரோட்டம் போல், இயல்பாய் சரள மான சொல் ஒட்டமாக அமைந்துள்ளது. ரசனைக்கு நல்விருத்தாகும், எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறலாம் 'இருள் நடுவே ஏற்றிவைத்த விளக்கைப் போலும் இதயவாசல் திறக்கின்ற திறத்தைப் போலும் பொருள் தந்த இன்பநிலைத் தன்மை போலும் பூரித்தார் நெஞ்சத்தின் மகிழ்வைப் போலும் மருள்நீக்க எழுகின்ற உண்மை போலும் மணமக்கள் காண்கின்ற மணவி ழாதான் திருமணமாய் முன்னடத்தல் கண்டோம்!” மணவிழா இனிது நடத்தலுக்கு இப்படி அநேக உவமைகளைக் கூறிச் சிறப்பிக்கிறார் கவிஞர். உவமையைப் படைக்கும்போதுகூட பெருங்கவிக் கோவின் மனித நேயமும், உழைப்போரின் அவல நிலைக் காக மனவேதனை கொள்ளும் இயல்பும் மேலோங்கி ஒலிப்பதை அவரது கவிதைகளில் காணமுடியும். ‘மண்ணைத் தோண்டியே பயிர் விளைக்கும் தொல் புகழ் பெருமக்கள்தான், துண்டில் முள் புழுவை உண்ட துள்ளுமீன் போல வாழும் நிலை என்று ஒரு இடத்தில் பொருத்தமாக அவர் வர்ணித்திருக்கிறார். ஆடை உற்பத்தி செய்கிறவர்கள் போதுமான அளவு உடை உடுத்த இயலவில்லை. உழைக்காத செல்வர்களோ பகட்டாக அ ண ந் து மினுக்குகிறார்கள். இத்த முரண்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த