பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


128 வல்லிக்கண்ணன் ஒய்ந்து போன உழைப்பாளிகளின் உள்ளத்தைப் போல கருகிக் கிடந்தன! எப்போதாவது வரும் திருவிழாக்களில் எப்படியும் மகிழ நினைக்கும் ஏழை எளிய மக்களின் மனதைப் போல வழித்தட மெல்லாம் ஆங்காங்கே உள்ள ஆற்றின், கேணிகளிலும் கிடங்குகளிலும் தண்ணிர் தேங்கி நின்றது,' இவ்விதம் வகைவகையாய் உவமைகளை அழகாகவும்: பொருத்தமாகவும், கற்பனை நயத்தோடும் கவிதைத் திறத்தோடும் பெருங்கவிக்கோ கையாண்டிருக்கிறார். அவரது கவிதைப் படைப்புகளில் அவை நிறைந்து காணப் படுகின்றன. அவற்றில் ஒரு சிலதான் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. ஆய்வு மாணவர்கள் பெருங் கவிக்கோவின் உவமைகள் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்தால். அது பயனுள்ளதாக அமையும். இங்கு இன்னுமொரு உவமைக் கவிதையை மட்டும் எடுத்துக்கூற விரும்புகிறேன்,