பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் ( 129 நன்கு கல்வி கற்ற அறிஞர் பலர் மெய்த் துணிவோடு, நாட்டு நலம் கருதி, உண்மைகளை சுட்டிக் காட்டி. தவறு செய்வோரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, நேர்மை வழிநின்று நல்லன புரிய முன் வராததை சீறியும் சினந்தும் கண்டித்தும் எள்ளியும் பாடியிருக்கிறார் பெருங்கவிக்கோ பல இடங்களில். அந்த விதமான கவிதை ஒன்று. இதில் உவமைகள் பல சேர்ந்துள்ளன"வானகமே மழைநீரைப் பருகி விட்டு வையத்தை வெறுப்பதுபோல்,அறஞ்செய்கின்ற. தானத்தான் பொருளையெலாம் ஏப்பம் விட்டுத் தன்கையை விரிப்பது போல், நேர்மைநெஞ்ச மானத்தை மாவீரன் துறப்ப தைப்போல், மாகல்வி படித்தபலர் இன்று தீய ஈனர்க்குத் துதிபாடிக் கால்பி டித்தே எத்தர்களாய் மாறிவிட்டார் மானக் கேடு!”