பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4 அவர்களுடைய கவிதைகளும் மறதிப் பாழில் பாரதிதாசன் ஒரு காலகட்டத்தில் மிகுந்த கவனிப்பைப் பெற்றார். அதை அடுத்து பாரதிதாசன் பரம்பரை' என்று பலர் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டனர். அ வ ர் க ளி ைட யி லு ம் சிலர் தான் கவனிப்புப் பெறமுடிந்தது. சுரதா, முடியரசன், வாணி தாசன், நாரா. நாச்சியப்பன் என்று. அதுவும் குறுகிய காலக் கவனிப்புதான். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்து கவிதை எழுதுகிறவர்கள் பெயர்வெளிச்சம் பெற முடிகிறது. அல்லது , சினிமாவில் வெற்றி பெறுகிறவர்கள் புகழ் வெளிச்சம் அடைய முடிகிறது. அரசியல் கட்சியின் ஆதரவோ, சினிமாவின் துணையோ பெற்றிராத கவிஞர் கள் உரிய கவனிப்பைப் பெறத் தவறி விடுகிறார்கள். அரசியல் கட்சியைச் சார்ந்திருப்பினும், உயிர்ப்பும் உத்வேகமும் நிறைந்த கவிதைகள் படைத்துள்ள சில: கவிஞர்கள் பரவலான கவனிப்பைப் பெறமுடிந்துள்ளது. என்று சொல்வதற்கில்லை. தொ.மு.சி. ரகுதாதன், கே.சி. எஸ். அருணாசலம் போன்ற சிலரது திறமையும் ஆற்றல் நிறைந்த படைப்புகளும், அவை பெற்றிருக்க வேண்டிய அளவு கவனத்தை தமிழ் இலக்கிய ரசிகர் களிடையே பெற்றுவிடவில்லைதான். அவர்கள் சார்ந் துள்ள கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஒரளவு தெரிய வந்திருக்கலாம். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம, திறமை யாளர்களின் திறமையும் படைப்பு:ம் உரிய முறையில் எடுத்துச் சொல்லப் படுவதில்லை. இதுவே முழு முதல் காரணம் ஆகிவிடாது. திறமையாளர்களும் அவர்களது சாதனைகளும் போதுமான கவனிப்பைப் பெறமுடியாமல்