பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12. குறுங் காப்பியங்கள் காலத்தின் தேவையையும், தாய் மொழியின் வளர்ச்சியையும் வளத்தையும் கருத்தில் கொண்டு புதுமை, யான கவிதைப் படைப்புகளில் தனது திறமையைக் காட்டி, பாராட்டத் தகுந்த வெற்றிகளைப் பெற்றி ருப்பவர் பெருங்கவிக்கோ, சமூகத்திலும் நாட்டிலும், மக்களிடமும் குறைபாடு: கள் மலிந்து கிடக்கின்றன. கொடுமைகள் மண்டி வளர் கின்றன. அவற்றை எல்லாம் எடுத்துச்கூறி, மனிதர்கள் மனிதர்களாக வாழ்வதற்கான வழிவகைகளை சுட்டிக் காட்ட வேண்டியது படைப்பாளர்களின் கடமையாகும். கவிதைகள் மூலம் இதை சிறப்பாகச் செய்ய முடியும். இதை நன்கு உணர்ந்த பெருங்கவிக்கோ உணர்ச்சியும் வேகமும் நிறைந்த கவிதைகள் இயற்றியுள்ளார். தனித் தனியாக, சிறு சிறு கவிதைகளும்-நீண்ட கவியரங்கப் பாடல்களும் எழுதி, புதிய புதிய கருத்துக்களைக் கூறி சிந்தனை ஒளி பரப்பி வந்துள்ள கவிஞர், குறுங்காப்பியம் வழியாகவும் மக்கள் மனசில் பதியும்படியாக உண்மை நிலைமைகளை சித்திரித்திருக்கின்றார். இவ்வகையில் பெருங்கவிக்கோவின் 'விடிந்தால் விடுதலை?’ என்ற குறுங்காப்பியம் குறிப்பிடத் தகுந்தது. நாட்டுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்று "சுதந்திர நாள் கொண்டாடப் படுகிறது. ஆயினும்