பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 3 188 சிறப்புகள் என்று விரிவாக விவரித்தபடி வளர்ந்துள்ளது காப்பியம். பல் பயணத்தின் சிரமங்களும் கூறப்படுகின்றன. 'வருந்து நிலையினிலே-பேருந்தின் வாசலேறிப் பின்னே உள்ளே சென்று. இறங்கும் நிலைவரைக்கும்-அந்தோ எத்தனை எத்தனை எத்தனை இடையூறு கிறங்கிக் கிறுகிறுப்போம்-இடியில் கிடந்து வதங்கி சோர்ந்து போவோம் துறந்த துறவியைப் போல்-உந்தித் தொடர்ந்து முயன்று ஏறிப்பின் நமை மறந்தே செலவேண்டும்-இந்த வகையில் கூட்டம் மண்டும், மண்டுமே!’ இது ஒரு சிறு எடுத்துக்காட்டு. பேருந்தினுள் அருட்கனி சந்திக்க நேர்ந்த அனுபவங் களை சொல்கிற காவியம் சமூகத்தின் சீரழிவுகளையும் நாட்டின் அவலங்களையும் கூறுகிறது. விடுதலைத் திருநாள் பற்றிக் கூறி உண்மையான விடுதலை பற்றிய சிந்தனைகளை வலியுறுத்துகிறது. "தீண்டாமை இந்த நாட்டில் தெருவெல்லாம் சிரிக்க, ஈதை பூண்டோடு ஒழிப்ப தாக புறம்புறம் பேசு வோர்கள் ஆண்டிடத் தாங்கள் மேன்மை அணிபெறத் தலைவ ராக தீண்டாமை வளர்த்தால் இந்தத் தேசத்தின் வாழ்வும் உண்டோ?