பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


134 வல்லிக்கண்ணன் அரசியல் வேட்டைக் கேதான் அயராமல் விழிக்கின்றார்கள் தரமிலார் உலுத்தர் தம்மை தாம்சேர்த்து ஆட்டம்ஆடி கரமேற்கும் வெற்றி கண்டு கயவர்கள் கால்கள் பாதை சிசம்வைத்தே ஆளும் ஆட்சி தேவையா? விடுதலையா?” இவ்விதம்-இன்னும் வேகமாகவும்-எ ன்னச் சுடர் களை அள்ளிச் சிதறுகிறார் பெருங்கவிக்கோ. உள்ளத்தின் தவிப்பும் துடிப்பும் அனல் தெறிக்கின்றன சொற்களில், பொய்மையை உண்மை சென்று போற்றியே துதிக்கும், நல்ல நெய்யிலே நஞ்சு வீழ்ந்து நெடும்பசி புகுந்தழிக்கும் - வெய்யிலில் உழைப்போர், ஆற்றல் வீரத்தின் மரபில் வந்தோர், செய்கையில் கீழோர் வீழ்ந்தே சீரழிந்தார்கள் வெட்கம்! சுதந்திரம் யாருக்காக? சுயநலக் காரரேதான் விதம்விதமாக ஓங்க, வேடிக்கை மனித ரெல்லாம் பதம்பெற்று வாழக் கற்றார் பாதகர் தம்மைப் போற்றி நிதம் வாழல் சுதந்திரம்மா? நெடுந்துரம் நமக்கதற்கும்!'"