பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 189 சென்ற தாழ்குலத்தார் நம்மவர் தேவைகளை நினைப்ப தாழ்குலத்தார் என்று ஒதுக்கப்பட்டவர்களிடையிலும், படிப்பாலும் உத்தியோகத்தாலும் திருமணத் தொடர்பு களாலும் மேம்பட்டவர்கள் உயர்ந்தவர்கள் என்றும், வசதிகளைப் பெற முடியாதவர்கள் கீழானவர்கள் என்றும் பிரிவுகள் ஏற்பட்டிருப்பதைக் கவிஞர் சுட்டிக் காட்டுகிறார். "தாழ்ந்தவர் என்றே ஒதுக்கியவர்கூட தங்களுக்குள் ஒற்றுமை-என்றும் வாழ்வு தருமென்ற வாஞ்சை அறமின்றி வம்பிலே வாழ்ந்திருப்பார்" என யதார்த்த நிலையை உணர்த்துகிறார். மனிதர்கள இப்படி வேறுபாடுகள் காண்பதற்காக பெருங்கவிக்கோ பரிதாபப்படுகிறார், 'உண்ணுகின்ற சோறெல்லாம் ஒன்றே நன்கு உடுத்துகின்ற உடையெல்லாம் ஒன்றே காதல் பண்ணுகின்ற இடமெல்லாம் ஒன்றே வாழ்ந்து பயன்காணும் பூமியதும் ஒன்றே என்றும் நண்ணுகின்ற உயிர்காற்றும் ஒன்றே நம்பி நானிலத்தில் வாழ்வதும் ஒன்றே ஒடும் திண்மைதரு குருதியதும் ஒன்றே! ஏனோ . தினவெடுத்த மாந்தர் வேறுபாடு காண்பர்!’ மேல் சாதி கீழ்சாதி எங்கய்யா இருக்கு? உயர்வு தாழ்வு பேசுறியே! எல்லாரும் செத்தா ஒண்ணாத் தானப்பா, மண்ணிலே, சுடுகாட்டிலே வக்கிறாங்க!” என்று ஒரு கதாபாத்திரத்தைப் பேச வைத்திருக்கிறார் தேவையற்ற சாதி இருள் தேசமெங்கும் -