பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் ( 141 பாமரர்களிலும் கேவலமாக கலப்புமணம் தாழ்சாதியில் நடப்பது ஏதோ ஒரு கேவலத்திலும் கேவலமாக எண்ணும். கீழ்மைப் போக்குதானே இன்னும் உள்ளது! இந்து மதத்தில் சாதித் தாழ்வின் காரணமாக சமத்துவம் மறுக்கப்படும் வரை நீதி என்பது அங்கே எங்கே நிலைக்கும்? இவ்விதம் சமூக விமர்சனத்தையும், தனிமனிதர் பற்றிய கண்டனங்களையும், கீழ்மைப் போக்குகள் மற்றிய சாடல்களையும் முக்கியப்படுத்தி, உண்மைநேர்மை- நீதி நிறைந்த சிந்தனைகளுக்கே முதலிடம் தந்து பெருங்கவிக்கோ இக்குறுங்காவியத்தை உருவாக்கி யிருக்கிறார். அதனால் காவியத்தின் கதை அம்சம் சத்தின்றி ஒதுங்கிப் போய் விட்டது. எனினும், சுட்டிக் காட்டப்பட வேண்டிய குறைபாடு களை துணிவாகச் சுட்டியும், சொல்லியாக வேண்டிய சிந்தனைகளை அழுத்தமாகச் சொல்லியும் அவர், மரபும் புதுமைப் பாங்கும் கலந்த முறையில், இக்காவியத்தை ஆக்கியிருப்பது பாராட்டுதலுக்குரியது. 'கடந்தகால நச்சுமர அறியாமையை வருங்கால வைகறைச் செந்தழல் பொசுக்கும்.