பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுநத அருங்கவிஞர், இ. 14க் மனித இனமோர், இனமே என்னும், மார்க்கம் தந்தார் இலையாமோ? தனித்தனி மதங்கள். தனித்தனி வளர்ச்சி, சாவின் மறுபதிப் பாகிடுமோ? மார்க்கம் வந்திடும் நாளெதுவோ? தனித்தும் வெறிசெய் இனத்தின்மோகம் சாய்ந்து போகும் நாளெதுவோ?’ இந்த உயரிய சிந்தனையை தமிழ்த்துறவி வாயிலாக, வெளிப்படுத்துகிறார் பெருங்கவிக்கோ. - புத்தர் இசைக்கும் கீதம் மூலமும் உயர்ந்த, சீரிய எண்ணங்களை கவிஞர் ஒலி பரப்புகிறார். "கருணை உலகில் மலர்கவே-மனம் கண்ணியத்தால் நிறைகவே! அருளே உலகை ஆள்கவே!-பிற அதர்மம் எல்லாம் வீழ்கவே! இவ்வாறு தொடங்கி மேலும் பல பாக்களாக நல்லெண்ணங்கள் வளர்ந்துள்ளன. மனிதரை வாழ்விக்கக் கூடிய-மனித குலத்தை உய்விக்க வல்ல-நற்சிந்தனைகள் அேெவ. பெருங்கவிக்கோ பல இடங்களில் வலியுறுத்தி வருகிற: முக்கிய உண்மைகள் சிலவற்றை இக்காவிய நாடகத்திலும் பதிவு செய்திருக்கிறார். அவை இங்கு எடுத்தெழுதப்பட வேண்டியவையே யாகும். - ‘புத்த மதத்தின் முன்னோடி-நவப் புனிதத் தமிழர் வாழ்வுநெறி-பல சித்தர் வாழ்ந்த வாழ்க்கைமுறை-எம் செந்தமிழ் தந்த அறமுறையாம்.