பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


146 ) வல்விக்கன்னன் எங்கள் தமிழர் உலகுவளர் ஏற்ற கொள்கை போற்றிநிதம்-தமிழ் தங்கக் கொள்கை மறந்தோமே-குறள் தந்த நெறியும் துறந்தோமே! பல்கும் பலப்பல மதங்களிலே-எம்மோர் வாழ்வை ஒன்ற வைத்தாரே-தமிழ் வெல்லும் நெறியை மறந்தாரே-அந்தோ வேதனை மேல் வேதனைகள்! வந்த மதத்தை வளர்த்தார்கள்-தமிழர் சொந்த நெறியை மறந்தார்கள்-உயிர்ச் செந்தமிழ்நல் பாலமன்றோ-எம்மைச் சேர்த்து வைக்கும் தெய்வமய்யா! சாதியாலே கெட்டழிந்தோம்-ஈன சாத்திரத்தால் கெட்டழிந்தோம்’ இத்தகைய ஊன்றி உணர்தற்குரிய உண்மைகளை இக் காவிய நாடகம் உணர்ச்சியோடு அறிவிக்கிறது. பெருங்கவிக்கோவின் மற்றொரு கவிதை நாடகம் 'காலக்சனி’ அளவில் பெரியது. 359 பக்கங்களைக் கொண்டது. தற்கால நிலைமைகளை நன்கு எடுத்துக் காட்டும் சமூக சித்திரமாகும், இறந்த காலப் பெருமை களை விவரிக்கும் வரலாற்று ஓவியமாகவும், எதிர்காலச் சிறப்புகளை வியப்புறக் காட்டும் கற்பனைப் படைப்பாக வும் அது விளங்குகிறது. மூன்று காலங்களிலும் எந்தக் காலம் மாண்பு உடையது என்ற பிரச்னை எழுகிறது. வளங்கள் மிகுந்து நலன்கள் நிறைந்து திகழ்ந்த இறந்த காலம் தான் உயர்ந்தது என்ற எண்ணம் வளர்க்கும் ஒவியன் எழிலவன் காவிய நாயகனாகச் செயல்படுகிறான். தற்கால அவல