பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


148 Bவல்லிக்கண்ணன். குழப்பமுற்ற ஒவியன், நள்ளிரவில் கனவில் தன் குரு நாதரைக் காண்கிறான். அவர் பல உண்மைகளை, அவனுக்கு உணர்த்துகிறார். இறந்த காலத்தினுள் பயண்ம். செய்தும் இனிவரும் எதிர்காலத்தில் சென்று காணவும், மீண்டும் தற்கால நிலை பெறுவதற்கும் உதவக் கூடிய மூன்று கனிகளை குரு அவனுக்கு அளிக்கிறார். அவற்றின் உதவியால் அவன் இறந்த காலத்தில் வாழ்ந்தும், எதிர் காலத்தினுள் சென்றும் அனுபவம் பெற்று, நிகழ் காலத்துக்கு மீண்டு அறிவுத் தெளிவு பெறுவதாகக் காவிய நாடகம் விவரிக்கிறது. காலங்களினூடே எழிலவன் பயணம் செய்து கண்டு அறிகிற அனுபவங்கள் நாடகச் சுவையோடு விறுவிறுப் பாக அமைக்கப்பட்டுள்ளன. அறிவின் ஆற்றலையும், இறைவனின் திறனையும், ஆன்ம சக்தியையும் கவிஞர் இக் காவியத்தில் உறுதியுடன் பதிவு செய்துள்ளார். மதியே பெரிதுகாண், மதிஅறிவியலால் எதிர் இக்காலம் எங்கனும் மாட்சி! இறைவன் என்பவன் இணையிலா அறிவின் நிறைவில் சிரிப்பான்; நெஞ்சகம் வஞ்சக எண்ணம் விடுத்தால், ஈடிலா உண்மை நண்ணும். அதனால் நனிவளர் ஆன்மா ஒப்பிலாச் சக்தியின் உறைவிட மாகும். அப்பெரும் சக்தியோ அகிலம் ஆளும்!” இறுகியில், எழிலவன், அவரவர் வாழும் தற்காலம் தான் நற்காலம் என உணர்கிறான். "அவரவர் வாழும் அவ்வக் காலம் அவரவர் சிந்தனை ஆக்கும் காலம்! நிகழ் காலத்தினை நெஞ்சகம் வையான் தகவெதிர் காலம் தான் பெறான். என்றும் ஓங்கிய உழைப்பும், உயர்ந்த நெறியும்