பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. காவியங்கள் எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுமக்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவானாகிறான்' என்பது மகாகவி பாரதியின் வாக்கு, தமிழின் முதலாவது புதுமைக் காவியமான"பாஞ்சாலி சபதத்தை பாரதியார் தனது கூற்றுக்கு ஆதர்சமாகவும்: இனிப்பிறந்து காவியம் செய்யப்போகிறவர்களுக்கு வழிகாட்டியாகவும் படைத்து வழங்கினார். அம்மகாகவி காட்டிய வழியில் காவியம் படைக்கும் ஆர்வம் கொண்ட பெருங்கவிக்கோ தாய்மண்” என்ற தனது முதல் காவியத்தை 1976ல் ஆக்கினார். தமிழ் காவிய மரபின் படி தாய் மண்' எனும் காவியமும் மன்னனின் போக்கு, அவனது காமக்கிழத்தி யின் சூழ்ச்சி, அவள் சகோதரனான படைத்தலைவனின் வஞ்சகம், இளவரசியின் காதல், அவள் காதலுக்கு. உரியவனான வீர இளைஞனின் துணிகரச் செயல்கள், நல்லவரான அமைச்சர், அவருடைய மகன் வீரநாயகனின் துணைவனாக இருந்து அரும் செயல்கள்.புரிதல், காவியத் தலைவனுக்கு ஏற்படும் துன்பங்கள், அவன் பெற்றோரின் வரலாறு, அவர்களது மரணம், தாயின் மரணத்தின் பின் விளைவுகள், இளவரசியின் முனைப்பான நடவடிக்கை