பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 18: கள், அவளது தியாகம் எண்றெல்லாம் கதை புனையப் பட்டிருக்கிறது. - காவியத்தின் எளிய நடையும், சொல் ஒட்டமும், வகைவகையான சந்தங்களும், அழகிய இயற்கை வர்ணனைகளும். கற்பனை வளமும் நயமும் செறிந்த உவமைகளும், உணர்ச்சித் துடிப்பும், ஆழ்ந்த கருத்துக் களும் இப்படைப்புக்கு இனிமையும் வனப்பும் சேர்த் துள்ளன. நலம் பயக்கக்கூடிய உயர் சிந்தனைகளை காவியத்தலைவன் வாயிலாகக் கவிஞர் வெளிப்படுத்தி யிருப்பதும் போற்றுதலுக்கு உரியது. - 'மனிதர்களை மதிக்கின்ற வழக்கம் வேண்டும்! மனிதர்நெறி மனிதரெல்லாம் போற்ற வேண்டும்! மனிதர்களை மாடுகள்கீழ் நடத்தி விட்டு மாநிலத்தை ஆள்வதிலே மகிமை உண்டோ? மனிதர்களே வையகத்தின் தெய்வங்கள்!அம். மானுடத்தை மானுடமே மதித்து வாழ்ந்தால் மனிதர்களில் பேதமுண்டோ? வஞ்சம் உண்டோ? வரலாற்றில் களங்கமுண்டோ? எண்ணிப்シー 星与F萨舒覆” இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இயற்கை வர்ணனைகளில் கற்பனை அழகு மிளிர் கிறது. அத்துடன் உவமையின் வனப்பும் எழிலூட்டு கிறது. காலைக் கதிாவன் தோற்றம் குறித்துக் கவிஞர் பாடுவது படித்து ரசிக்க வேண்டிய வரிகள் : கதிரவன்! அன்னான் கருத்தின் பெட்டகம்! விதி உடைத் திட்டெழு மதி அறிவைப்போல்