பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


152 ற வல்லிக்கண்ணன் மாயம் எதிர்த்தெழு மாவீரன்போல் பாய வருகரி பாய்ந்த சிங்கம்போல் தானொருவனே இத்தாரணி காப்பவன் நானொருவனே தான் நாயகன் என்றே எழுந்திடும் பொழுதில் எங்கணும் மஞ்சள் வழுவறப் பூசி வனப்பாக்கிய போல் ... - வெயில்முகம் காட்டினான்! வெற்பெலாம் மாட்சி! நிலாவின் வனப்பும் அழகிய உவமைகளோடு இனிய கவிதையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. > மோர்க்குடத்தின் மேலே-திரண்டு மிதக்கும் வெண்ணெய்ப் போலும் சீர்த்த யானைத் தந்தம்-உருண்டு செய்த தன்மை போலும் • வார்த்து வானில் விட்ட-வெள்ளி வட்டத் தட்டைப் போலும் பார்க்கும் வெளியெங்கும்-பொங்கும் பால் நிலாவின் ஒளியாம்! திங்கள் உதயத்தை மற்றோர் இடத்தில் வேறொரு விதமாக வர்ணிக்கிறார் கவிஞர். கவிதையின் எடுப்பும், கற்பனையின் வீச்சும், அடுக்கு உவமைகளின் அழகும் பெருங்கவிக்கோவின் படைப்புத் திறனை நன்கு புலப் படுத்தக் கூடியவை கரவுளார். நெஞ்சம் போலும் கஞ்சர்கள் எண்ணம் போலும் தரமிலார் நட்டைப் போலும், தான்தோன்றித் தனத்தைப் போலும்